1862 ஆம் ஆண்டில், கிறிஸ்தவ மிஷனரியான S.P.G. மிஷன், பொறையாரில் ஒரு பள்ளியைத் திறந்தது,  ஆனால் அவர்களால் பள்ளியை சரியாக நிர்வகிக்க முடியவில்லை, 1882-ம் ஆண்டில், அப் பள்ளியை மூட முடிவுசெய்தது.

தவசுமுத்து நாடார் தனது மாவட்டத்தில் உள்ள மக்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஒரு பள்ளி அவசியம் என அறிந்து இருந்தார். எனவே SPG மிஷன் இடமிருந்து பள்ளியை வாங்கினார் தவசுமுத்து நாடார். [1]

1882 ஏப்ரல் 1 ஆம் தேதி அன்று “தவசுமுத்து நாடார் பள்ளி” என்று புது பெயருடன் பள்ளி திறக்கப்பட்டது. திரு. நெய்லர் எனும் ஒரு ஆங்கிலேயரை தலைமை ஆசிரியராக நியமித்தார்.

பள்ளி அனைத்து சமுகத்தை சேர்ந்த குழந்தைகளுக்கும் இலவச கல்வியை வழங்கியது. 10 ஏக்கர் சொத்தில் கட்டப்பட்ட இந்த பள்ளியில், மாணவர்களுக்கு ஒரு பெரிய விளையாட்டு மைதானமும் உண்டு.

1915 – இல், மெட்ராஸ் பிரசிடென்சியின் கல்வி இயக்குநர் ஜே.எச். ஸ்டோன் பள்ளியை பற்றி கூறியதாவது:

“The school has attained that status of complete Secondary School, of which I believe it is doing its best to make it worthy, I am glad to learn that the Nadar’s propose to build a handsome and commodious school house on a very good size in the neighbourhood. I wish the school every success”

1920 இல், நிர்வாகம் பள்ளியில் தங்கும் விடுதியை திறந்தது.

என்.சி.சி தேசிய மாணவர் படை (கடற்படை பிரிவு மற்றும் காலாட்படை பிரிவு) 1958-இல், பள்ளியில் அமைக்கப்பட்டது.

1959 ஆம் ஆண்டில் தலைமை ஆசிரியர் பதவியை திரு. முத்துசாமி ஐயர் ஏற்றுக்கொண்டார், அவரது காலகட்டத்தில், பள்ளியின் வளர்ச்சிக்கு கடுமையாக பாடுபட்டார். புதிய கட்டிடங்களை கட்டுவதற்கு பல நன்கொடையாளர்களை அவர் அழைத்து வந்துள்ளார்.

“நாடார் ஹை ஸ்கூல்”என்று பொதுவாக அழைக்கப்படும் தவசுமுத்து நாடரின் உயர்நிலைப்பள்ளி 100 ஆண்டுகளுக்கும் மேலாக உருகிணைந்த தஞ்சை மாவட்டத்தில் கல்விக்கு ஒரு அடையாளமாக உள்ளது.

தவசுமுத்து நாடாரின் சந்ததியினர் பள்ளி வளாகத்தில் பல கட்டிடங்களை கட்டி வருகின்றனர்:

  • 1960 இல், தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் திரு. கக்கன்  ஒரு கட்டிடத்தைத் திறந்தார்.
  • 1963 ஆம் ஆண்டில் பள்ளியின் புதிய கட்டிடத்தின் அஸ்திவாரத்திற்கு இந்திய அரசின் துணை உள்துறை அமைச்சர் திருமதி. மரகதம் சந்திரசேகர் அடிக்கல் நாட்டினார்.
  • 1972 ஆம் ஆண்டில், அறிவியல் கூடத்துடன் ஒரு கட்டிடம், தொழிலதிபர் திரு சிவந்தி ஆதித்யன் அவர்களால் திறக்கப்பட்டது.
  • 110 வது ஆண்டு நினைவு கட்டிடத்தை மயிலாடுதுறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. பி.வி.ராஜேந்திரன் திறந்து வைத்தார்.
  • 2000 ஆம் ஆண்டில், தமிழ்நாடு அரசு கல்வி அமைச்சர் க. அன்பழகன், பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட ஆடிட்டோரியத்தைத் திறந்தார்.
  • சமீபத்தில், ரூ 30 லட்சம் மதிப்புள்ள சுகாதார வளாகத்தை, தவசுமுத்து நாடாரின் பேரன், தினத்தந்தி நாளிதழ் அதிபர் திரு. பாலசுப்பிரமணிய ஆதித்தன் அவர்கள் நன்கொடையாக அளித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் ஐ.ஏ.எஸ். இந்த சுகாதார வளாகத்தை 2018-இல் திறந்து வைத்தார்.

மேற்கோள்கள்:

[1] Page 201, Statistical Appendix And Supplement To The Revised District Manual (1906) For Tanjore District

Comments 2

I am great grand son of swamy Iyer who was secretary of the school for nearly 25 years. I require the date of birth of Swami Iyer. Can you please search the old records of the school and share the date of birth of Swami Iyer

Thanks

I am proud to be named as J. Thavasumuthu, in remembrance of the great legend Poraiyar Thavasumuthu Nadar.I am a retired Deputy Director of Agriculture, native of Kumbakonam living and settled in Madurai. My contact: 9443034561.

Leave a Comment

Your email address will not be published.

Copyright 2018. All rights reserved.