நாடார்கள் பெருமை வாய்ந்த க்ஷத்திரிய இனத்தைச் சேர்ந்தவர்கள். சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்களின் வழித் வந்தவர்களே நாடார்கள்.

த்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், கள்ளிறக்குபவர்களாகவும் பனையேறிகளாகவும் மட்டும் கருதப்பட்ட நாடார்கள் மற்ற சாதியனர்களால் ஏராளமான கட்டுப்பாடுகளையும் அவமானங்களையும் எதிர்கொண்டனர், நாடார் சமூகத்தின் பெரும்பான்மையானவர்கள் பொருளாதார ரீதியாக மந்த நிலையில் இருந்தனர்.

தமிழ்நாட்டில் மிக மோசமான ஒடுக்குதல்களுக்கு உட்பட்டிருந்த சமூகங்களில் நாடார்களும் ஒன்றாக இருந்தது .

அரசாங்க மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஒவ்வொரு சாதியும் அதன் பாரம்பரிய தொழிலுடன் பட்டியலிடப்பட்டுள்ளன [1], கடந்த சில நூற்றாண்டுகளாக கள் இறக்கும் தொழில் செய்து வந்த சாணார்கள், 1891 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கையின்படி, தீண்டத்தகாத சாதிகளில் ஒன்றாக பதிவு செய்யப்பட்டது. [2]

18 ஆம் மற்றும் 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், நாடார்களைப் பிற சாதியார் சாணான் என்று இழிவாக குறிப்பதையே வழக்கமாகக் கொண்டுயிருந்தனர். இவ்வாறு அழைக்கப்படுவதை நாடார்கள் எதிர்த்தனர். [3]

நாடார்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்த பகுதிகளில், கடுமையான சமூக இன்னல்களை அனுபவித்தார்கள். பொது வீதிகள், கிணறுகள் போன்றவற்றை உபயோகிக்கும் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் கூட அவர்களுக்கு மறுக்கப்பட்டன.

உதாரணமாக, 1897, மே 14 அன்று 15 நாடர்கள் கமுதியில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வர கோயிலுக்குள் நுழைந்து வழிபட்டனர். கோயிலின் பரம்பரை அறங்காவலர், ராம்நாட்டின் ராஜா எம்.பாஸ்கரா சேதுபதி (மறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்), நாடார்கள் தனது கோவிலுக்குள் நுழைந்ததற்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார்.

மதுரையில் இருந்த மாவட்ட நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டில், மெட்ராஸ் உயர் நீதிமன்றம் மற்றும் லண்டனில் இருந்த பிரிவி கவுன்சில் ஆகியவை “மீனாட்சி சுந்தர்க்சுவர்” கோயிலின் எந்தப் பகுதியிலும் நுழைய பிரதிவாதிகள் அல்லது அவர்களது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் (நாடார்கள்) உரிமை இல்லை என்று தீர்ப்பளித்தன. அதற்காக நிரந்தர தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. [4]

பொறையார் நாடார்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் ஒரு நல்லுறவைப் பேணி வந்ததாலும், சமூகத்தில் அவர்களின் பிரபுத்துவ அந்தஸ்தின் காரணமாகவும், பொறையாரின் நாடார்கள் எங்கும் இத்தகைய அவமானங்களை எதிர்கொண்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாடார்கள் ஒரு கோவிலுக்குள் நுழைய கூட தடை விதிக்கப்பட்டு இருந்த வேளையில், பொறையார் நாடார் எஸ்டேட் குடும்பத்தினர் வழக்கமாக கோயில்களில் வழிபட்டு வந்தனர் (இது குறித்த விவரமாக படிக்க, இங்கே கிளிக் செய்யவும்), பொறையார் நாடார் எஸ்டேட்டை  சேர்ந்த ஜமீன்தார் தவசுமுத்து நாடாரின் சகோதர், பொன்னுசாமி நாடார் பல கோயில்களைக் கட்டுப்படுத்தும் கும்பகோணம் தேவஸ்தானம் குழுவின் உறுப்பினராக இருந்தார்). [5] [6] [7]

பொறையார் நாடார் எஸ்டேட் குடும்பத்தை சேர்த்த ரத்தினசாமி நாடார், தனது சமூகம் நூற்றாண்டுகளாக அனுபவித்து வரும் அவமானங்களுக்கு நிரந்தர தீர்வு காண விரும்பினார்.

சட்டமன்றத்தில் நாடார் சமூகத்தின் நேரடி பிரதிநிதித்துவம் மட்டுமே சமூகத்தின் நலன்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்க முடியும் என்று அறிந்து இருந்தார் ரத்தினசாமி நாடார்.

ஒரு “நாட்டுகோட்டை செட்டியார்” தனது சாதியின் பிரதிநிதியாக சட்டசபையில் இடம்பெற்று உள்ளதை போல், தன்னை நாடார் சமூகத்தின் பிரதிநிதியாக சட்டசபைக்கு பரிந்துரைக்குமாறு ரத்தினஸ்வாமி நாடார் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

ஆனால் அந்த நாட்டுகோட்டை செட்டி, ஒரு செட்டியார் சங்கத்தின் பிரதிநிதி என்றும், நாடார்களின் பிரதிநிதியாக ஒருவரை பரிந்துரைக்க நாடார்களுக்கு சங்கம் இல்லையே என்று அரசு ரத்தினசாமி நாடாருக்கு பதில் அனுப்பியது.

ரத்தினஸ்வாமி நாடார் மற்ற அனைத்து நாடார் தலைவர்களையும் தனது இல்லமான கும்பினி தோட்டத்திற்கு அழைத்து, சங்கம் அமைப்பது குறித்து விவாதித்தார்.

அவர் தென்னகம் முழுவதும் ஆட்களை அனுப்பி, நாடார் சமூகத்தை வலுப்படுத்த ஒரு சங்கம் அவசியம் என்ற  விழிப்புணர்வைப் ஏற்படுத்தினர், நாடார் சமூகத்தின் குறைகளை அரசாங்கத்திற்கு எடுத்துச் சொல்வதற்கும், நாடார் இன மக்களின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்துக்கு நாடார் மகாஜன சங்கம் தேவைஎன  நாடார்  மக்கள்ளை  உணர வைத்தார். இதற்கான அனைத்து செலவுகளையும் பொறையார் நாடார் எஸ்டேட்  கவனித்து கொண்டது .

பொறையார் நாடார் எஸ்டேட் மீது மாநிலம் முழுவதும் உள்ள நாடர்களுக்கு மிகுந்த மரியாதையும் அன்பும் இருந்தது, எனவே ரத்தினஸ்வாமி நாடார் அவர் தொடங்கத் திட்டமிட்டுள்ள சங்கத்தில் சேருமாறு கேட்டபோது, சமூகம் அவருக்கு பின்னால் கூடியது.

நாடார்களுக்காக ஒரு சங்கத்தை உருவாக்குவது எளிதான காரியமல்ல. அவர்கள் மற்ற சாதியினரிடமிருந்து பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

முன்னதாக, 1895 ஆம் ஆண்டில், பல நாடார் தலைவர்களும் வணிகர்களும் மதுரையில் ஒரு சங்கத்தை உருவாக்க கூடினர், ஆனால் அவர்களால் சங்கத்தை உருவாக்க முடியவில்லை, ஏனெனில் அவர்கள் மாநிலம் முழுவதும் உள்ள நாடார் மக்களின் நம்பிக்கையை பெற முடியவில்லை.

ரத்தினஸ்வாமி நாடருக்கு அது நன்றக தெரியும், எனவே அவர் சவால்களை எதிர்கொள்ள நிறைய செலவு செய்தார். மேலும் அரசாங்கத்தில்  நாடார் எஸ்டேடின் செல்வாக்கும் உதவியது (மாவட்ட ஆட்சியர், நாடார் எஸ்டேடின் ஒரு மாளிகையில்தான் வசித்து வந்தார் [8] மற்றும் மெட்ராஸ் ஆளுநர் தஞ்சாவூர்  மாவட்டத்திற்கு வருகை தரும் போதெல்லாம் பொறையார் நாடார் எஸ்டேடின் வல்லம் அரண்மனை மற்றும் தரங்கம்பாடி பங்களாவில் தான் விருந்தினராக தாங்கினார்) [9].

அரசாங்கத்தின் அபிமானத்தை கொண்டுயிருந்த, பொறையார் நாடார் எஸ்டேட்டால் மட்டுமே சங்கம் உருவாக்க முடியும் என்று நாடர்கள் சமூகம் நம்பியது! மெட்ராஸ் பிரசிடென்சியின் பல்வேறு பகுதிகளிலிருந்து 450 பிரதிநிதிகள் வந்தனர்.


1910 பிப்ரவரி 6, 7, மற்றும் 8 ஆம் தேதிகளில், நாடார் சமூகத்தின் 450 பிரதிநிதிகளுடன் பொறையாரில் மாநாடு நடைபெற்றது, மேலும் பிப்ரவரி 7, 1910 அன்று நாடார் எஸ்டேடின் இல்லமான “கம்பெனிஸ் கார்டெனில்” நாடார் மகாஜனா சங்கம் உருவானது.

நாடார் மகாஜனா சங்கத்தின் தலைவராக பொறையார் நாடார் எஸ்டேட்டை சேர்ந்த பொன்னுசாமி நாடார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

டி.ரத்தினசாமி நாடார் மாநாட்டின் தலைவராகவும் 450 பிரதிநிதிகளில் 34 பேர் நிர்வாக உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். பொறையார் கம்பெனிஸ் கார்டன் சங்கத்தின் தலைமையகமாக இருந்தது. [10] [11] [12]

டிசம்பர் 1910 இல், மெட்ராஸில் நடைபெற்ற சங்கத்தின் இரண்டாவது மாநாட்டில் 750 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர், டி.ரத்தினசாமி நாடார் இரண்டாவது மாநாட்டின் தலைவராகவும் பொறுப்பேற்றார்.

டி.ரத்தினசாமி நாடார் இரண்டாவது மாநாடு முடிந்த உடனேயே இறந்துவிட்டார், இது சங்கத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாடார் சமூகத்திற்கும் ஒரு பேரிழப்பாகும்.

நிறுவனர் டி.ரத்தினசாமி நாடார் இறந்த பிறகு, சங்கத்தின் தலைவர் பதவி பொறையார் நாடார் எஸ்டேட் குடும்பத்துக்கே என்று சங்கத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அதன் பின்னர், பொறையார் நாடார் எஸ்டேட் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே தலைவர் பதவியை வகிக்கின்றனர். சங்கத்தின் உறுப்பினர்களால் (தேர்தல் முலம்) தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச் செயலாளர் சங்கத்தின் அனைத்து விவகாரங்களுக்கும் பொறுப்பாவார். [13]


நாடார் சமூகத்தின் முன்னேற்றத்தில் நாடார் மகாஜன சங்கத்தின் பங்கு.

  • நாடார் என பெயர் மற்றம்

நாடார் மகாஜன சங்கத்தின் முக்கிய கடமைகளில் ஒன்றாக இருந்தது, சாணான் என்ற பெயரை நாடார் என்று மாற்றி, அதற்கு அரசின் அங்கீகாரம் பெறுவது ஆகும்.

1910 முதல் 1921 வரை [14], பல்வேறு அரசாங்கத் துறைகள் மற்றும் அதிகாரிகளுக்கு (ஆளுநர் வரை) தொடர்ச்சியாக கடிதங்கள் மற்றும் மனுக்கள் அனுப்பிய பிறகு, இறுதியாக 1921-ல் ஜூலை 7 ஆம் தேதி அன்று அரசாங்கம் நாடார் என்ற பெயரை அங்கீகரித்து, அதற்கான உத்தரவுவை  பிறப்பிக்கப்பட்டது. [15]

மேலும், நாடார்களின் பாரம்பரிய தொழிலாக, கள் இறங்குவதை காட்ட வேண்டாம் என்றும் அரசு முடிவு செய்தது.

  • நாடார் சமூகத்தின் கல்வியில் சங்கத்தின் பங்கு:

1910 ஆம் ஆண்டில் நாடார் மகாஜன சங்கம் நிறுவப்பட்டதுதான் நாடார்களிடையே கல்வியின் மிக முக்கியமான முன்னேற்றம் என்றும், சங்கம் தொடக்கத்திலிருந்தே கல்வி தான் அதன் முதன்மை நோக்கங்களில் ஒன்றாக விளங்கியது என்றும் நாடார்களின் வரலாற்று ஆசிரியர் ராபர்ட் எல். ஹார்ட்கிரேவ், தனது புத்தகமான  “நாடார்ஸ் அப் தமிழ்நாடு” -ல் குறிப்பிட்டுள்ளார்.

சங்கத்தின் ஆரம்பகால நோக்கங்களில் ஒன்று, தேவைப்படும் மாணவர்களுக்கு நிதி உதவி வழங்குவதாகும். 1921 முதல், நாடார் மகாஜனா சங்கம் நாடார் மாணவர்களுக்கு உதவித்தொகை-கடன்களை வழங்குகிறது.

நாடார்கள் தங்களது கிராமங்கள் மற்றும் நகரங்களில் சொந்த பள்ளிகளை நிறுவ சங்கம் உதவியுள்ளது, மேலும் ஒவ்வொரு ஆண்டும் (1964 நிலவரப்படி) சுமார் 50 தொடக்கப் பள்ளிகள் சங்கத்திலிருந்து நேரடி நிதி உதவியைப் பெறுகின்றன. சிறப்பான நாடார் மாணவர்களை உயர்கல்விக்கு வெளிநாடுகளுக்கு அனுப்பவும் சங்கம் உதவுகிறது. [16]

சங்கம் பல கல்வி நிறுவனங்களை உருவாக்கி நாடார் சமூகத்தின்  முன்னேற்றத்துக்கு பெருமளவில் உதவியது.

இன்று, சங்கம் தமிழகம் முழுவதும் பல பள்ளிகளையும் கல்லூரிகளையும் பராமரிக்கிறது. [17] ​​ நாடார் மகாஜன சங்கத்தின் கட்டுப்பாட்டில் 8 கல்லூரிகள் உட்பட 25 கல்வி நிறுவனங்கள் உள்ளன:

  • நாடார் மகாஜன சங்கம் எஸ்.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி
  • நாடார் மகாஜன சங்கம் எஸ்.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி-College of Education
  • நாடார் மகாஜன சங்கம் சேர்மத்தாய் வாசன் பெண்கள் கல்லூரி (அவனியாபுரம், மதுரை)
  • நாடார் மகாஜன சங்கம் காமராஜர் பாலிடெக்னிக் கல்லூரி
  • நாடார் மகாஜன சங்கம் காமராஜ் கல்வியியல் கல்லூரி (கன்னியாகுமரி)
  • நாடார் மகாஜன சங்கம் எம்.எஸ்.பி. வேலாயுத நாடார் லட்சுமிதாய் அம்மால் பாலிடெக்னிக் கல்லூரி (பாவூர்ச்சத்ரம், திருநெல்வேலி)
  • நாடார் மகாஜன சங்கம் விமலா செல்லதுரை பாலிடெக்னிக் கல்லூரி (மல்லம்பாளயம், தாராபுரம், திருப்பூர் மாவட்டம்)
  • நாடார் மகாஜன சங்கம் ஜெயராஜ் அன்னபாக்கியம் துணை மருத்துவக் கல்லூரி (ஆத்தூர் திருவட்டார் கன்னியாகுமரி மாவட்டம்)
  • நாடார் மகாஜன சங்க ஆசிரியர் பயிற்சி நிறுவனம் (நாகமலை புதுக்கோட்டை, மதுரை)
  • நாடார் மகாஜன சங்கம் அன்னபாக்கியம் ஜெயராஜ் நாடார் I.T.I (மல்லம்பாளையம், தாராபுரம், திருப்பூர்)
  • நாடார் மகாஜன சங்கம் சேதுராமன் நாடார் நெல்லியம்மல் I.T.I (தாமரைக்குளம், ரெட்டாயுரானி, ராம்நாத் மாவட்டம்)
  • நாடார் மகாஜன சங்கம் L.A.M.K. நடராஜன் I.T.I (கள்ளிக்குடி, திருமங்கலம், மதுரை மாவட்டம்)
  • நாடார் மகாஜன சங்கம் அய்ய வைகுண்டர் I.T.I (கள்ளிகுளம், நெல்லை மாவட்டம்)
  • நாடார் மகாஜன சங்கம் வி.பி.ராமலிங்க நாடார் I.T.I (பச்சயபுரம், வேம்பார், தூத்துக்குடி மாவட்டம்)
  • நாடார் மகாஜன சங்கம் உயர்நிலைப்பள்ளி (மெத்தலோ, திருப்புல்லாணி, ராம்நாடு மாவட்டம்)
  • நாடார் மகாஜன சங்கம் சேர்மத்தாய் வாசன் உயர்நிலைப்பள்ளி (அரசடிவண்டல், ராம்நாடு மாவட்டம்)
  • நாடார் மகாஜன சங்கம் சேர்மத்தாய் வாசன் நடுநிலைப்பள்ளி (மாயாகுளம், எர்வாடி, ராம்நாடு மாவட்டம்)
  • நாடார் மகாஜன சங்கம் சேர்மத்தாய் வாசன் நடுநிலைப்பள்ளி (தோப்பலகரை, பரலாச்சி, அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டம்)
  • நாடார் மகாஜன சங்கம் கல்விதான் தாய் கே.எஸ்.சண்முகவேல் நாதர் நடுநிலைப்பள்ளி (சாயல்குடி, ராம்நாடு மாவட்டம்)
  • நாடார் மகாஜன சங்கம் சேர்மத்தாய் வாசன் தொடக்கப்பள்ளி (மெத்தலோடை, திருப்புல்லானி, ராம்நாடு மாவட்டம்)
  • நாடார் மகாஜன சங்கம் சேர்மத்தாய் வாசன் தொடக்கப்பள்ளி (அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டம்)
  • நாடார் மகாஜன சங்கம் பாண்டியன் தொடக்கப்பள்ளி (அரசடிவண்டல், ராம்நாடு மாவட்டம்)
  • நாடார் மகாஜன சங்கம் வி.நாகராஜன் நாடார் தொடக்க மற்றும் நர்சரி பள்ளி (ரெட்டையூரானி, ராம்நாட் மாவட்டம்)
  • நாடார் மகாஜன சங்கம் சரஸ்வதி கோபாலகிருஷ்ணன் நாடார் தொடக்க மற்றும் நர்சரி பள்ளி (நாகுபில்லைத்தோபு, மதுரை மாவட்டம்)
  • நாடார்களின் பாதுகாவலனாக நாடார் மகாஜன சங்கம்

ங்கம், 1910 இல் நிறுவப்பட்டதிலிருந்து, நாடார் மக்களுக்கு எங்கும், எவ்விதமான கட்டுப்பாடுகளோ அவமாரியாதைகளோ நேர கூடாது இன்பதில் உறுதியாக இருந்தது.

சங்கத்தால் களத்தில் விடப்பட்ட ஒன்பது பயண முகவர்கள், தெற்கு மாவட்டங்கள் வழியாக கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு சென்று நாடார் மக்களிடம் அவர் அவர் ஊர்களில் ஒரு “உறவின்முரை” அல்லது ஒரு கிளை சங்கத்தை நிறுவும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால், பல்வேறு மாவட்டங்களில் இருந்த நாடார்கள் ஒன்றிணைக்க பட்டனர்.

1964 ஆம் ஆண்டு நிலவரப்படி, நாடார் மகாஜன சங்கம் ஒவ்வொரு ஆண்டும் கிராமங்களில் ஏற்பட்ட தகராறுகள் தொடர்பாக சுமார் இருநூறு புகார்களைப் பெறுகிறது. இவற்றில், 150 பேர் மற்ற சாதிகளுடனான மோதல்களையும், கிட்டத்தட்ட 50 புகார்கள் நாடார்களிடைய ஏற்பட்ட தகராறும் உள்ளடக்கியது.

நாடார்களுக்கும் பிற சமூகத்தினற்கும் இடையே எழும் எந்தவொரு தகராறிலும், நாடார்கள், சங்கம் தலையிடுமாறு மனு செய்யலாம். சங்கமும் நன்கு விசாரித்து பின் நடவடிக்கை எடுக்கும்.

போலீஸ் தலையீடு மற்றும் அடுத்தடுத்த நீதிமன்ற நடவடிக்கை மூலம் மட்டுமே ஒரு சர்ச்சைக்கு தீர்வு காண முடியுமானால், சட்ட ஆலோசனையைப் பெறுவதற்கும், வழக்கு முறையாக விசாரிக்கப்படுவதைப் கவனிப்பதுக்கும் சங்கம் அனைத்து உதவிகளையும் வழங்கும்.

இது போன்ற மோதல்களில், ஆழ்ந்த சாதி விரோதங்கள் இடம்பெறவில்லை என்றால், போலீஸ் தலையீட்டைத் தவிர்க்க முடியுமானால், சங்கம் மற்ற சமூகத்தின் தலைவர்களை அணுகி பிரச்சனையின் தீர்வுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதித்து பிரச்னையை தீர்த்துவைத்தது.

உதாரணமாக, 1960 ஆம் ஆண்டில் மேற்கு ராம்நாட்டில் ஒரு கிராமத்தில் நாடாருக்கும் கோனார் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் ஒரு தகராறு.

நாடார் சமூகத்தில் இறந்தவர்களை கல்லறைக்கு கொண்டு செல்வதற்கு, கோனார் சமூக கிராமத்தின் வழியாக உள்ள சாலையைப் பயன்படுத்த நாடார்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

பழக்கவழக்த்தின் படி , கோனார் கிராமத்தைச் சுற்றி கொண்டு தான் நாடார்கள் சென்றனர், ஆனால் அன்று மோசமான வானிலை காரணமாக, நாடார்கள் இறந்த குழந்தையின் உடலை கோனார் கிராமம் வழியாக அடக்கம் செய்வதற்காக கொண்டு செல்ல முயன்ற போது ஒரு தகராறு ஏற்பட்டது.

நாடார்கள் பிரச்னையை சங்கத்திற்கு கொண்டு வந்தனர். சங்க அதிகாரிகள், மதுரையில் வசித்த ஒரு செல்வாக்கு மிக்க கோனார் தொழிலதிபரும், மதுரையில் ஒரு துணைப் பதிவாளரான மற்றொரு கோனாரையும் அணுகி சர்ச்சையின் தீர்த்துவைக்க ஒரு பஞ்சாயத்து ஏட்பாடு செய்தனர்.

பஞ்சாயத்தில் சுமுகமான தீர்வு ஏட்பட்டது. நாடர்களை அந்த சாலையில் சுதந்திரமாக செல்ல கோனார் கிராம மக்கள் ஒத்துக்கொண்டனர். [18]

கமுதி வழக்கிலிருந்து, குமுதியில் நாடார்களும் மராவர்களுக்கும் இடையேயான மோதல் தொடர்ந்தது. நாடார் மகாஜனா சங்கம், மறவர் சமூகத் தலைவர்களுடனான பல சந்திப்புகளுக்குப் பிறகு, சண்டை அமைதியாக தீர்த்துவைத்தது.

1979 ஆம் ஆண்டிற்கான சங்கத்தின் செயல்பாடுகளின் பட்டியலைப் பார்த்தால், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் சமூகம் எதிர்கொண்ட பிரச்சினைகள் பற்றிய நாம் விரிவான புரிந்துகொள்ளலாம்.

  • ராஜகம்பீரம் கிராமத்தில் (சிவகங்கை தாலுகா) 15 நாடார் குடும்பங்களுக்கும், கிராமத்தில் வசித்த 500 முஸ்லீம் குடும்பங்களுக்கும் இடையிலான கலவரம், நாடார் மகாஜன சங்கத்தின் தலையீட்டால் இணக்கமாக தீர்க்கப்பட்டது.
  • கலைகுளம் கிராமத்தில் (இளயங்குடி தாலுகா) நாடார் மற்றும் தேவர் சமூகத்தினரிடையே பல தகராறுகள் ஏற்பட்டுள்ளன. நாடார் மக்கள் உபயோகிக்கும் கிணற்றை தேவர் சமூகத்தினர் மாசு படுத்தினர், இதன் விளைவாக ஒரு பெரிய கலவரம் ஏற்பட்டது. கிராமத்தைச் சேர்ந்த நாடார்கள், நாடார் மகாஜன சங்கத்தை அணுகியது, ​​சங்கம், காவல்துறையினரைத் தொடர்புகொண்டு, கலவரம் மேலும் வளராமல் பார்த்துக்கொண்டது. மேலும், அப்பகுதியில் உள்ள தேவர் மற்றும் நாடார் தலைவர்களை ஒன்றிணைத்து பஞ்சாயத்து நடத்தி சமரசத்தை செய்தது.
  • புக்குலம்வில்லாவில் (ராமநாதபுரம் தாலுகா), ராமச்சந்திர நாடார் பனைமரத்திலிருந்து கீழே விழுந்து இறந்தார், சங்கம் ரூ .12,000 காப்பீட்டுத் தொகையை விதவைக்கு ஒப்படைக்க ஏற்பாடு செய்தார்.
  • குடிரைமொழி கிராமத்தில் (முடுகுலாதர் தாலுகா), கள்ளு இறக்கும் தொழில் செய்துவந்த 42 நாடார்
    குடும்பங்கள் பனை தோப்புகளில் குடிசைகளில் வசித்து வந்தன. அவர்கள் இப்போது நாடார் உறவின்முறையால் ஒன்றிணைக்கப்பட்டு, தஹசில்தாரின் உதவியுடன், நாடார்களுக்கு குடிசைகள் கட்டுவதற்கு அவர்களுக்கு அருகிலுள்ள நிலம் வழங்கப்பட்டுள்ளது.

மேல குறிப்பிட்டுள்ளவை வெறும் சில உதாரங்களே, 100 ஆண்டுகளை கடந்தவிட்ட நாடார் மகாஜன சங்கம், இதுபோல் பல முறை, நாடார்களின் அரணாக முன்னின்று நாடார்களுக்கு உதவியது.

  • அரசியல்: சட்டசபைக்கு நாடார்களின் பிரதிநிதித்துவம்

மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் (Montagu–Chelmsford Reforms), 1919ல் பிரிட்டிஷ் இந்தியாவின் தலைமை ஆளுநராக இருந்த செம்ஸ்போர்டு பிரபு மற்றும் பிரிட்டிஷ் இந்திய அரசின் செயலாளர் எட்வின் சாமுவேல் மாண்டேகுவும் இணைந்து, பிரிட்டிஷ் இந்திய மாகாண நிர்வாகங்களில் இந்தியர்களுக்கு சுயாட்சி வழங்க, 1919ல் ஒரு அறிக்கையை தயாரித்து பிரிட்டிஷ் பேரரசுக்கு அனுப்பினர்.

இதனடிப்படையில் இந்திய அரசுச் சட்டம், 1919 நிறைவேற்றப்பட்டது. இச்சட்டப்படி சென்னை மாகாணம், வங்காள மாகாணம், பம்பாய் மாகாணம், மத்திய மாகாணம் மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன், மக்கள் பிரதிநிதிகள் கொண்ட சட்டமன்றங்கள் நிறுவப்பட்டது.

சீர்திருத்தங்கள் பிரகடனத்திற்கு முந்தைய ஆண்டில், அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் தேவைகளை அறியும் முயற்சியில் செயலாளர் மொன்டாகு மற்றும் வைஸ்ராய் செல்ம்ஸ்ஃபோர்ட் ஆகியோர் இந்தியக்குள் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.

நாடார் சமூகத்திலிருந்து ஒரு பிரதிநிதியை சட்டசபைக்கு பரிந்துரைக்க ஆராயுமாறு மொன்டாகு மற்றும் செல்ம்ஸ்ஃபோர்டுக்கு மனு அனுப்பியது நாடார் மகாஜன சங்கம். ஆனால “கோரிக்கையில் எந்த அரசியல் காரணமும் வழங்கப்படவில்லை என்ற அடிப்படையில்” கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இருப்பினும், சங்கத்தின் தலைவர் பொறையார் நாடார் எஸ்டேடின் வி. பொன்னுசாமி நாடார், பிராமணரல்லாத சமூகத்தின் பிற பிரதிநிதிகளுடன், மொன்டாகுவுடன் சந்தித்து சட்டசபையில் நாடார்களின் பிரதிநிதித்துவம் குறித்து பேசினார் [19]

மொன்டாகு-செல்ம்ஸ்ஃபோர்ட் சீர்திருத்தங்களின் கீழ் முதல் தேர்தல்கள் 1920 நவம்பரில் நடந்தன, நீதிக் கட்சி கணிசமான பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. மீண்டும், நாடார் மகாஜன சங்கம் , நாடார் சமூகத்திலிருந்து ஒருவரை சட்டசபைக்கு பரிந்துரைக்க பரிசீலிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியது.

நாடார் சமூகத்தினருக்கு சமூகம், அரசியல், பொருளாதாரம் போன்றவைகளில் ஏராளமான சிக்கல்கள் உள்ளன. அவைகள் குறித்து மற்ற சமூகத்தை சார்ந்த உறுப்பினர்களால் மேலவையில் சரிவர குரல் கொடுக்க முடியாது. எனவே நாடார்களின் நலன் பாதுகாக்கபட வேண்டுமென்றால் சட்டசபையில் நேரடி அங்கம் இன்றியமையாதது ஆகும். இவ்வாறு நாடார் மகாஜன சங்கம் அரசை கேட்டுக்கொண்டது. [20]

சில நாட்களுக்குப் பிறகு, ஆளுநர், நீதிக் கட்சியின் தலைவரின் பரிந்துரையின் பேரில், நாடார் மகாஜன சங்கத்தின் பொதுச் செயலாளராக (4 ஆண்டுகள்) துணைத் தலைவராக (17 ஆண்டுகள்) இருந்த, பட்டிவீரன்பட்டியை சேர்ந்த 27 வயதான W. P. A. சௌந்தரபாண்டியன் நாடாரை (1893-1953) சட்டசபைக்கு பரிந்துரை செய்வதாக அறிவித்தார்.

சட்டப்பேரவையில் நுழைந்த முதல் நாடார் W. P. A. சௌந்தரபாண்டியன் ஆவார்.

1920 முதல் 1937 வரை சட்டமன்றத்தில் பணியாற்றிய W. P. A. சௌந்தரபாண்டியன், தன்னை நாடார் சமூகத்தின் பிரதிநிதியாகவும், நாடார் மகாஜன சங்கத்தின் பிரதிநிதியாகவும்மே கருதினார்.

  • தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கி (TMB)

நாடார் மகாஜன சங்கம் தொடங்கப்பட்டபோது, சங்கத்தின் நிறுவனர் ரத்தினசாமி நாடார், நாடர்களுக்காக ஒரு வங்கியைத் தொடங்க விரும்பினார். [21]

1920 இல், நாடார் மகாஜனா சங்கத்தின் தூத்துக்குடி மாநாட்டில், எம்.வி. சண்முகவேல் நாடார் மற்றும் ஏ.எம்.எம். சின்னாமணி நாடார், நாடர்களுக்கு ஒரு வங்கியை அமைப்பதன் அவசியத்தையும் சாத்தியங்களையும் முன்மொழிந்தனர். சபை ஒரு வங்கியைத் தொடங்குவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது.

அந்த நேரத்தில், டி.வி.பாலகுருசாமி நாடார் பொறையார் நாடார் எஸ்டேடின் தலைவராக இருந்தார், அவர் நாடார் மகாஜன சங்கத்தின் தலைவராகவும் இருந்தார்.

நாடார் எஸ்டேட் வங்கியில் இருப்பது வங்கியின் நம்பகத்தன்மையை மேம்படுத்தும் என்று என்னிய சங்கத்தின் தலைவர்கள், ஜமீன்தார் டி.வி.பாலகுருசாமி நாடரை அணுகி, வங்கியில் ஒரு அங்கமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டனர். டி.வி.பாலகுருசாமி நாடார் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டு 10% பங்கை வாங்கி, வங்கியின் கமிட்டில் சேர்ந்தார்.

நாடார் வங்கியின் நிறுவனர் இயக்குநர்கள் :

டி.வி.பாலகுருசாமி நாடார்
வி.சண்முகவேல் நாடார் (தலைவர்)
எம்.எம். சின்னமணி நாடார்
வி.இ. காசிசாமி நாடார்
நான் ஒரு. காளியப்ப நாடார்
கே.எஸ்.ஏ. ஆறுமுக நாடார்
வி.இ. ரத்னசாமி நாடார்
ஏ.எஸ். ஆறுமுகசாமி நாடார்
பி.ஏ. மரிமுதூ நாடார்
ஏ.ஷென்பாகா நாடார்

இந்த வங்கி 1921 ஆம் ஆண்டு மே 11 ஆம் தேதி ‘தி நாடார் வங்கி லிமிடெட்’ என்று பதிவு செய்யப்பட்டது.

தூத்துக்குடியில் உள்ள தெற்கு ராஜா தெருவில் உள்ள அனா மாவண்ணா கட்டிடத்தில், நவம்பர் 11, 1921 அன்று டி.வி.பாலகுருசாமி நாடார் இந்த வங்கியை திறந்து வைத்தார்.

1962 ஆம் ஆண்டில், நாடார் வங்கி தனது பெயரை தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கி லிமிடெட் என்று மாற்றியது. வங்கிக்கு முக்கிய கொள்கையில் ஒன்று கிராமப்புறங்களில் உள்ள பொது மக்களுக்கு வங்கி சேவையை கொண்டுசெல்வது, வங்கியின் 509 கிளைகளில், 457 கிளைகள் கிராமப்புற மற்றும் சிறு நகர்ப்புறங்களில் அமைந்துள்ளன.

2018–2019 நிதியாண்டில், தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கி ரூபாய் 2585 மில்லியன் நிகர லாபத்தை அறிவித்துள்ளது!

நாடார் மகாஜனா சங்கம் தனது 100 வது ஆண்டை 2010 இல் நிறைவு செய்தது. சமுதாயத்தில் இன்று நாடார் சமூகம் அடைந்துள்ள முன்னேற்றத்தில், நாடார் மகாஜன சங்கத்துக்கும், அதனை தோற்றுவித்த பொறையார் நாடார் எஸ்டேட் குடும்பத்துக்கும் முக்கிய பங்கு உள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.

மேற்கோள்கள்:

[1] Page 133, The Nadars of Tamilnad By Robert L. Hardgrave
[2] Page 297, Census of India, 1891, Vol XIII: Madras Report | Page 140, Migration Settlement and Ethnic Associations By K. P. Kumaran | Page 133, The Nadars of Tamilnad By Robert L. Hardgrave
[3] Page 109, Caste in Indian Politics by By Rajni Kothari | Page 134, The Nadars of Tamilnad By Robert L. Hardgrave
[4] Page 41, The Modernity of Tradition: Political Development in India By Lloyd I. Rudolph, Susanne Hoeber Rudolph | Page 121, The Nadars of Tamilnad By Robert L. Hardgrave
[5] Page 124 – The Nadars of Tamilnad By Robert L. Hardgrave
[6] Page 29, South India Political Institutions and Political Change 1880–1940 by C. J. Baker, D. A. Washbrook
[7] Page 187, The Emergence of Provincial Politics – The Madras Presidency 1870—1920 By D. A. Washbrook
[8] The Hindu, 10 and 17 June 1896
[9] The Fourth And Fifth Tours of His Excellency Lord Ampthill, In The Madras Presidency Printed By The Superintendent, Government Press.
[10] Page 131 – The Nadars of Tamilnad By Robert L. Hardgrave
[11] Journal of Asian Studies Vol. 37, No. 2 by Lucy Carroll
[12] Mahajanam Magazine dated July 30, 1969
[13] Page 164 – The Nadars of Tamilnad By Robert L. Hardgrave
[14] Page 133 to 136 – The Nadars of Tamilnad By Robert L. Hardgrave
[15] Govenunent of Madras. Law (General) Department. G. 0. No. 785, dated July 7th
[16] Pages 145 to 147 – The Nadars of Tamilnad By Robert L. Hardgrave
[17] List of educational institutions listed on Nadar Mahajana Sangam’s official website
[18] Pages 157 to 162 The Nadars of Tamilnad By Robert L. Hardgrave
[19] Page 173, The Nadars of Tamilnad By Robert L. Hardgrave
[20] Letter to the Governor of Madras from the Nadar Mahajana Sangam, December 14, 1920 (N.M.S. Letterbook, 1920 -1921)
[21] Nanayam Vikatan, 2012 / Article – Business samugam – Nadargal | In the Rediff.com’s interview with Mr. Kathiresan, grandson of A.M.M. Sinnamani Nadar (Founder Directors)

Comments 2

I am very happy to say iam nadar

Proud To be NADAR

Leave a Comment

Your email address will not be published.

Copyright 2018. All rights reserved.