Act XX of 1863 இன் மூலம், ஆங்கிலேயர்களின் மெட்ராஸ் அரசு இந்து கோவில்களின் நிர்வாகத்திலிருந்து முற்றிலுமாக விலகியது.

Act XX of 1863 படி, ஒரு பகுதியை சேர்ந்த ராஜா அல்லது ஜமீன்தார், அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலின் பரம்பரை உரிமையை நிரூபிக்க முடிந்தால், அவர்கள் அந்த கோவிலின் தலைமை நிர்வாகிகளாக ஆக்கப்பட்டனர். மடங்களை பொறுத்தவரை, தலைமை மடாதிபதிகளுக்கு முழு உரிமை வழங்கப்பட்டது.

அத்தகைய உரிமையாளர்கள் இல்லாத கோவில்களை நிர்வாகிக தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்கள் (கமிட்டி) அமைக்கப்பட்டன.

அந்த காலகட்டத்தில், இதுபோன்ற கோவில் கமிட்டிஇல் உறுப்பினராவது கௌரவமாக கருதப்பட்டது. மேலும் சீமான்கள், பிரபுக்கள் மற்றும் மேட்டுக்குடியை சேந்தவர்கள் மட்டுமே இக்கமிட்டியில் அமர முடிந்தது.

கோயில் குழுக்களின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தபோது, ​​தஞ்சை மாவட்டத்தின் கோவில்களில் ஆதிக்கம் செலுத்தியவர்கள், மிராசுதார் ராவ் பகதூர் S.A. சாமிநாத ஐயர் மற்றும் ராவ் பகதூர் T.S. சிவசாமி உடையார். [1]

பொறையார் நாடார் குடுப்பம் தாங்களும் இந்த கமிட்டியில் சேர விறுப்பினர்.

நாடார் எஸ்டேட்டை சேர்ந்த ஜமீன்தார் தவசுமுத்து நாடாரின் சகோதரர் டி.பொன்னுசாமி நாடார், கும்பகோணம் கோயில் கமிட்டியில் (கும்பகோணம், மாயாவரம் மற்றும் சீர்காழி யை சேர்ந்த கோயில்களை நிர்வகிக்கும் குழு[2]) உறுப்பினராக போட்டியிட முடிவு செய்தார்.

நாடார் சமுகத்தை சேர்ந்தவர்கள் கமிட்டியில் அமர்வதில் கமிட்டி தலைவரான, S.A. சாமிநாத ஐயர்-க்கு விருப்பம் இல்லை. எனவே அவர், நாடார்களுக்கு எதிராக வாக்களிக்க வாக்காளர்களை வலியுறுத்தி பிரச்சாரத்தை நடத்தினார்.

சாதி தூய்மையைக் காக்கும் பொருட்டு நாடார்களுக்கு பதில் தன் நண்பருக்கு வாக்களிக்கமாறு கேட்டுக்கொண்டார் சாமிநாத ஐயர். [3]

பிரச்சாரம் மிகவும் கசப்பானதாக மற்றும் வன்முறையாக இருந்தது. [4]

பூண்டியின் ஜமீன்தார் V. அப்பஸ்வாமி வாண்டையார் உட்பட மாவட்டத்தின் சில முன்னணி பிரபுக்களும் நாடார் எஸ்டேட்டை ஆதரித்தனர். கும்பகோணத்தில் உள்ள பிராமண முக்கியஸ்தர்கள், பேராசிரியர்களும், பொன்னுசாமி நாடார்-ஐ ஆதரித்தனர். [5]

நாடார் எஸ்டேட்க்கு அவரது ஆதரவாளர்கள் மட்டுமல்லாமல், காவல்துறை மற்றும் வருவாய் துறைகளும் ஆதரவாக இருந்தது. [6]

தற்கிடையில், திருவாதிரை பண்டார சன்னிதி ஆதீனம் (இது பெரிய ஆஸ்திகளைக் கொண்ட (40,000 ஏக்கர்) சைவ மடம்), S.A. சாமிநாத ஐயர்-க்கு ஆதரவு தெரிவித்தார்.

அதை எதிர்கொள்ள, பொறையார் நாடார் எஸ்டேட், திருப்பனந்தலில் உள்ள திருவாதிரை ஆதீனத்தின் துணை ஆதீனத்தை அவரிடமிருந்து விலக்க முயற்சித்தது. இக் காரணத்தால் திருவாதிரை ஆதீனம், சாமிநாத ஐயர்-க்கு அளித்த ஆதரவை விலகிக்கொண்டது. [7]

S.A. சாமிநாத ஐயரின் பிரச்சாரம் மற்றும் சாதி எண்ணம் கொண்ட இந்துக்களால் நிரம்பிய கமிட்டியானது என்ற போதிலும், பொறையார் நாடார் எஸ்டேட் பெரும்பான்மையுடன் வென்றது. [8]

டி.பொன்னுசாமி நாடாரின் எதிரிகள் நீதிமன்றத்தை அணுகினர், ஆனால் அதிலும் நாடார் எஸ்டேட்தான் வென்றது.

நாடார் எஸ்டேட்டை சேர்ந்த ஜமீன்தார் தவசுமுத்து நாடாரின் சகோதரர், வி.பொன்னுசாமி நாடார் 1889 ஆம் ஆண்டில் பல கோவில்களை கட்டுப்படுத்திவந்த கும்பகோணம் தேவஸ்தானம் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

ஒரு கோவில் கமிட்டியில் அமர்ந்த, நாடார் சமூகத்தைச் சேர்ந்த முதல் நபர் பொறையார் நாடார் எஸ்டேடின் பொன்னுசாமி நாடார்.

கோயில் குழுவில் ஒரு நாடார் இருப்பது, 1890-களில் பெரும் பரபரப்பை ஏட்படுத்தினாலும், அடுத்த முப்பது ஆண்டுகளுக்குள், பொறையார் நாடார் எஸ்டேட் குடும்பத்திலிருந்து ஒருவர் தேவஸ்தானம் குழுவின் உறுப்பினராக இருப்பது, அந்த தேவஸ்தானம் பெருமையாக கருதியது. [9]

முன்னதாக வெள்ளையா நாடரின் காலத்திலிருந்து, பொறையார் நாடார் எஸ்டேட் பல்வேறு கோவில் விழாக்கள் மற்றும் திருவிழா செலவினங்களை செய்துள்ளது.

சிதம்பரத்தில் நடராஜா கோயில்*, திருச்செந்தூர் முருகன் கோயில், கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் கோயில், பழனி முருகர் கோயில் மற்றும் திருக்கடையூரில் உள்ள அபிராமி கோயில் ஆகிய கோயில்களில் நிலங்களை நன்கொடையாக அளித்தது மற்றும் பணத்தை “டெபாசிட்” செய்து பல்வேறு நிரந்தர கட்டளைகளை நிறுவியுள்ளது.

*கமுதி வழக்கின் போது, சிவகாசியின் நாடார்கள், சிதம்பரம் கோயிலில் இருந்த பூசாரியை சாட்சியாக அழைத்து, நாடார் சமூகம் தாழ்ந்த நிலையில் இல்லை என்பதற்கு சான்றாக, சிதம்பரம் கோயிலில் பொறையார் நாடார் எஸ்டேடின் குடும்பத்துக்கு வழங்கப்படும் சலுகைகளை குறித்து சாட்சியம் அளித்தார் [10]

நாடார் எஸ்டேட் குடும்பத்தை சேர்ந்தவர்களே பொறையாரில் உள்ள 5 கோயில்களின் (சிவன் கோயில், விஷ்ணு கோயில், குமாரன் கோயில், விநாயகர் கோயில், அய்யனார் கோயில்) பரம்பரை அறங்காவலர்களாக உள்ளனர்.

இந்த கோயில்களுக்கு 350 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்களை நாடார் எஸ்டேட் குடும்பத்தினர் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

தவசுமுத்து நாடார் 1880 களில் பொறையாரில் பார்வதி அம்மனுக்கு கோயில் கட்டினார்.

பொன்னுசாமி நாடார் கும்பகோணத்தில் ஒரு விநாயகர் கோயில் கட்டினார்.

மேற்கோள்கள்:

[1] Page 115, The Emergence of Provincial Politics – The Madras Presidency 1870—1920 By D. A. Washbrook
[2] Hindu and Christian in South-east India: Aspects of Religious Continuity and Change, 1800–1900 by Geoffrey A. Oddie.
[3] Page 29, South India Political Institutions and Political Change 1880–1940 by C. J. Baker, D. A. Washbrook
[4] Hindu 23 July, 6, 15, 22, 24 and 27 August 1888.
[5] Page 29, South India Political Institutions and Political Change 1880–1940 by C. J. Baker, D. A. Washbrook
[6] Hindu 7 March 1888, 10 and 17 June 1896 | Page 106, The Emergence of Provincial Politics – The Madras Presidency 1870—1920 By D. A. Washbrook
[7] Page 29, South India Political Institutions and Political Change 1880–1940 by C. J. Baker, D. A. Washbrook
[8] Page 188, The Emergence of Provincial Politics – The Madras Presidency 1870—1920 By D. A. Washbrook
[9] The Hindu, 6 and 15 August 1888, 30 October 1894 | Also G.O. No. 1112, LSG, 9 March 1928 | Page 73, South India Political Institutions and Political Change 1880–1940 by C. J. Baker, D. A. Washbrook
[10] Page 124, The Nadars of Tamilnad By Robert L. Hardgrave

Comment 1

சாந்தார நாழி

தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் வில்லவர் குலங்கள் ஆட்சி செய்தபோது, ​​சைவக் கோயில்களின் கருவறையைச் சுற்றி சாந்தார நாழி அல்லது சாந்தார நாழிகை என்று அழைக்கப்படும் ஒரு பாதை இருந்தது, அதன் மூலம் சான்றார் மன்னர்கள் கர்பக்ரிஹத்தை சுற்றி வந்தனர்.

சான்றார்கள் சேர, சோழ, பாண்டிய நாடுகளை ஆண்ட வில்லவர் உயர்குடியினர் ஆவர். சாந்தார நாழி என்று அழைக்கப்படும் இந்த அரச பாதை சுமார் ஏழு முதல் பத்து அடி அகலம் கொண்டது மேலும் இது கருவறையைச் சுற்றியுள்ள உள் சுவருக்கும் கோயிலின் வெளிப்புறச் சுவருக்கும் இடையில் அமைந்திருந்தது. இந்த பாதை கோவிலின் மேற்கூரையின் கீழும், கோவிலின் கோபுரத்தின் கீழும் இருந்ததால், புயல் மற்றும் கனமழையில் இருந்து பாதுகாக்கப்பட்டது. கடுமையான வானிலை நிலைகளிலும் கூட வில்லவர் வம்சங்களின் சான்றார் மன்னர்கள் அதாவது சேர, சோழ பாண்டிய மன்னர்கள் தங்களின் அரச வழித்தடத்தில் கருவறையில் உள்ள தெய்வத்தை சுற்றி வரலாம்.

சாந்தாரா நாழியின் சுவர்கள் அற்புதமான ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இந்த சோழர் கால ஓவியங்கள் பல நாயக்கர் காலத்தில் பூசப்பட்டு புதிய ஓவியங்கள் வரையப்பட்டபோது அழிக்கப்பட்டன.

தஞ்சாவூர் பெரிய கோயில் என்றழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோயிலில், சாந்தார நாழியில் இருந்த சோழர் கால ஓவியங்கள் பிற்கால நாயக்கர் கால ஓவியங்களால் மறைக்கப்பட்டன. சமீபத்தில் இந்த சோழர்கால ஓவியங்களில் சில மீட்டெடுக்கப்பட்டுள்ளன.

சாந்தார நாழியின் சுவர்களில் சிவபெருமானின் 108 நிலைகள் புடைப்புச் சிற்பங்களாக பொறிக்கப்பட்டுள்ளன. தஞ்சைப் பெரியகோயில்  சாந்தார நாழி இரண்டு தளங்களைக் கொண்டுள்ளது.

சான்றார் பட்டத்தின் மாறுபாடுகள்

சான்றார், சான்றோர், சான்றாரா, சாந்தார், சாந்தகர், சானார், சாணார், சாண்டார், சாந்து பாலன், சாந்தவர், சார்ந்தவர் போன்றவை வில்லவர்களின் சான்றார் பட்டத்தின் சில வேறுபாடுகளாகும்.

வில்லவர், வானவர், மலையர் போன்ற பல்வேறு வில்லவர் துணைக்குழுக்கள் மற்றும் தொடர்புடைய மீனவர் குலங்கள் ஒன்றிணைந்தபோது சான்றார் மற்றும் நாடாள்வார் என்ற நாடார் குலங்கள் தோன்றின.

சாந்தகன்

கி.பி 16 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட திருவிளையாடல் புராணத்தில் பரஞ்சோதி முனிவரால் சேர மற்றும் சோழ மன்னர்கள் சாந்தகன் குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று விவரிக்கப்பட்டுள்ளது.

சாந்தகன் பட்டம் நாடார்களின் சான்றார் பட்டத்தின் மாறுபாடாகும்.

"ஆற்றல் மிகு பிரதப சூரியன் வங்கிசத்துவன் அளவு இல் சீர்த்தி

சாற்ற அரிய இரிபும மருத்தனன் சோழ வங்கி சாந்தகன்
தான் வென்றி

மாற்ற அரிய புகழ்ச் சேர வங்கி சாந்தகன் பாண்டி வங்கி
கேசன்

தோற்றம் உறு பரித்தேர் வங்கிச் சிரோமணி பாண்டீச் சுரன்தான் மன்னோ".

சான்றாரா பாண்டியன் வம்சம்

கர்கலா-பாண்டியநகரியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட கர்நாடகாவின் சான்றார பாண்டிய வம்ச மன்னர்கள் தங்களை சான்றாரா பாண்டியர்கள் என்று அழைத்துக் கொண்டனர். சில கல்வெட்டுகளில் சான்றாரா பாண்டியர்கள் சாந்தார பாண்டியர், ஸாந்தா, சான்றா, சாந்தா, சாந்தாரா மற்றும் ஸான்றா என்றும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

சாந்தாரம் என்பது கோயிலின் கருவறையைச் சுற்றிலும் கோயிலின் வெளிப்புறச் சுவருக்கும் கருவறைச் சுவருக்கும் இடையே உள்ள வட்டப் பாதையாகும்.

சேர, சோழ, பாண்டிய வம்சங்களின் வில்லவர்-சாந்தார் மன்னர்கள் மற்றும் அரச குடும்பங்கள் "சாந்தார நாழி" மூலம் கருவறையை சடங்கு முறையில் சுற்றி வந்தனர். சாந்தார நாழி கோயிலின் கூரையின் கீழ் இருந்ததால், சாந்தார் மன்னர்கள் கடுமையான வானிலையிலும் வழிபடவும், சுற்றி வரவும் முடிந்தது.

வில்லவர்களால் ஆளப்பட்ட தமிழ்நாட்டிலும், ஹம்பியில் பாண வம்சத்தினர் என்று அழைக்கப்படும் வில்லவர்களின் வடக்கு உறவினர்களால் கட்டப்பட்ட கோயில்களிலும், பாண பலிஜா-ஐநூற்றுவர் ஆட்சி செய்த ஐஹோளேயிலும், சான்றாரா பாண்டியன் வம்சத்தால் ஆளப்பட்ட கர்காலாவிலும் சாந்தார நாழி கொண்ட கோயில்கள் தோன்றின.

16 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு, சான்றார்கள் சாந்தாரநாழி வழியாக தெய்வத்தை வலம் வரும் பாக்கியத்தை இழந்தது மட்டுமல்லாமல், சான்றார்கள் தங்கள் மூதாதையர்களின் கோவில்களுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டனர்.

Leave a Comment

Your email address will not be published.

Copyright 2018. All rights reserved.