• தரங்கம்பாடிக்கு ரயில் பாதை

 

பிரிட்டிஷ் இந்தியாவில் ரயில்வே மிக முக்கியமான உள்கட்டமைப்பாக இருந்தது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து, ரயில்வே கட்டுமானத்தால் மக்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எளிதாக செல்ல முடிந்தது; இது சிறிய கிராமங்களில் உள்ள மக்களுக்கும் வர்த்தகத்திற்கான புதிய வாய்ப்புகளைத் திறந்தது.

1896 ஆம் ஆண்டில், தஞ்சை மாவட்ட வாரியம் தனது சொந்த ரயில் பாதையை உருவாக்க முடிவு செய்தது.

பொறையாரின் நாடார் எஸ்டேட் , திருவாடுதுறை ஆதினம் , S.A. சாமிநாத ஐயர் – T.S. சிவசாமி உடையார் கூட்டணி (இருவருக்கும் மாயாவரத்தில் சொத்துக்கள் இருந்ததால், சாமினாதா ஐயர் தனது எதிரியான சிவசாமி உடையாருடன் ஜோடி சேர்ந்தார், புதிய ரயில் பாதையை மாயாவரத்திற்கு கொண்டு வர முடிந்தால், அவர்களின் சொத்துக்களின் மதிப்பு அதிகரிக்கும், எனவே அவர்கள் கைகோர்த்தனர்)

இந்த ரயில் திட்டத்திற்கு கலெக்டரின் ஆதரவைப் பெற, மூன்று அணிகளும் ஒருவருக்கொருவர் எதிராக பகிரங்கமாகத் பிரச்சாரம் செய்ய தொடங்கினர். [1]

இதில், பொருளாதார மற்றும் அரசியல் காரணங்கள் சம்மந்தப்பட்டு இருந்தன; இது தவிர சாதி பிரச்சினையும் சற்று அதிகமாகவே இருந்தது. இறுதியில், நாடார்களே வென்றனர்.

பொரையார் நாடார் எஸ்டேட்டை சேர்ந்த ராவ் பகதூர் டி.ரத்தினஸ்வாமி நாடார், தரங்கம்பாடிக்குக்கான ரயில் பாதையை கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்தார். [2]

நாடார் எஸ்டேட் குடும்பத்தினர் மாயாவரம் முதல் தரங்கம்படி வரை ரயில் பாதை போடுவதற்காக நிலங்களை ஆங்கிலேயர்களுக்கு நன்கொடையாக வழங்கியிருந்தனர்.

மாயாவரம் முதல் தரங்கம்பாடி வரையிலான தூரம் 30 கி.மீ ஆகும், இந்த ரயிலில் பயணிகளுக்கு 6 போக்குவரத்தும், பொருட்களை கொண்டு செல்ல 4 போக்குவரத்தும் இருந்தன.

1926 ஆம் ஆண்டில், ரத்தினசாமி நாடரின் முயற்சியைப் பாராட்டும் விதமாக, அவரது நண்பர்கள் மற்றும் பொதுமக்களின் சார்பாக தரங்கம்பாடி நகரின் நுழைவு வாயிலின் முன் ஒரு நினைவுத் தூணைக் கட்டினர். இந்த தூண் 1926 நவம்பர் 25 ஆம் தேதி மாண்புமிகு ஜே.ஏ. தோர்ன் (ESQ. ஐ.ஜி.எஸ்., தஞ்சை மாவட்ட நீதிபதி) அவர்களால்  திறக்கப்பட்டது.


  • ராஜா மிராசுதார் மருத்துவமனை

பிரிட்டிஷ் அரசு, தஞ்சையில் ஒரு மருத்துவமனை கட்ட முடிவு செய்தபோது தஞ்சை மராத்தியா ராணி காமாட்சி அம்பா பாய் 1878 ஆம் ஆண்டில் தஞ்சையில் உள்ள தனது 40 ஏக்கர் நிலத்தை பிரிட்டிஷ் கலெக்டர் ஹென்றி சல்லிவன் தாமஸுக்கு ஒரு மருத்துவமனையை உருவாக்க நன்கொடையாக வழங்கினார், மேலும் தஞ்சை ராஜாவின் குடும்பத்தின் தொண்டு நிறுவனம் ரூ. 30,000 மருத்துவமனையை கட்டியெழுப்ப நன்கொடை வழங்கியது.

கலெக்டர், தஞ்சையின் பிரபல மிராஸ்சுதார்களை தொடர்பு கொண்டு மருத்துவமனை கட்ட நன்கொடை கேட்டார்.

நாடார் எஸ்டேட்டை சேர்ந்த தவசுமுத்து நாடார், திருபானந்தல் ஆதீனம், பூண்டியின் வாண்டையார், கபிஸ்தலத்தின் மூப்பனார் உள்ளிட்ட பல மிராசுதாரர்கள் மருத்துவமனை கட்டிடத்திற்கான பணத்தை நன்கொடையாக வழங்கினர். [3]

மருத்துவமனை கட்ட ராஜாவின் குடும்பத்தினர் மற்றும் மிராசுதாரர்கள் ஆகியோரிடமிருந்து நன்கொடை பெறப்பட்டதால், மருத்துவமனைக்கு “ராஜா-மிராசுதார் மருத்துவமனை”என்று பெயரிடப்பட்டது.

முன்னதாக, பிரிட்டிஷ் அரசாங்கம் தஞ்சையில் ஒரு ரயில் நிலையம் கட்ட முடிவுசெய்தபோது, வெள்ளைய நாடார், தனது தஞ்சை மாளிகையை அரசாங்கத்திற்கு கொடுத்தார், ரயில் நிலையத்தின் தெற்கு நுழைவாயிலில் இருந்த இந்த பங்களா, ஆங்கிலேயர்களால் ரயில்வே மருத்துவமனையாக பயன்படுத்தப்பட்டது.


  • கும்பகோணம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவர் தங்கும் விடுதி

 

விக்டோரியா மகாராணியின் பொன்விழா 20 ஜூன் 1887 அன்று கொண்டாடப்பட்டது.

1905 ஆம் ஆண்டில், நாடார் எஸ்டேட்டின் டி. குருசாமி நாடார், அவரது தந்தை V. தவசுமுத்து நாடரின் நினைவாக கும்பகோணம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் தங்கும் விடுதி கட்டடத்தை கட்டினார். விக்டோரியா மகாராணியின் பொன்விழாவை நினைவுகூரும் விதமாக “விக்டோரியா மகாராணி ஹாஸ்டல்” என்று அந்த விடுதிக்கு பெயர் சூட்டப்பட்டது. [4]


  • நாடார் சத்திரங்கள்

 

1855 ஆம் ஆண்டில், வெள்ளைய நாடார் மேலமருத்தூர் மற்றும் காரைக்காலில் சத்திரங்களை கட்டினார் மற்றும் அதன் பராமரிப்புக்காக நிலங்களை நன்கொடையாக வழங்கினார். [5]

பின்னர், தவசுமுத்து நாடார் மாயாவரம் ரயில் நிலையம் அருகே தனது மனைவி சௌந்தரத்து அம்மாள் பெயரில் மாயாவரத்தில் ஒரு சத்திரத்தை கட்டினார் மற்றும் அதனை பராமரிப்பதற்காக சொத்துக்கள் மற்றும் கட்டிடங்களை எழுதிவைத்தார்.

இந்த சத்திரங்கள், பயணிகள் மற்றும் யாத்ரீகர்களுக்கு இலவசமாக தங்குமிடம் மற்றும் உணவு வழங்கின.

மேற்கோள்கள்:

[1] The Hindu, 10 and 17 June 1896 | Page 40, South India Political Institutions and Political Change 1880–1940 by C. J. Baker, D. A. Washbrook
[2] Page 10, Thamizhaga Varalatril Tharangampadi by A. Sivasubramanian | Page 26, Tales of Tranquebar By Prof. P. Maria Lazar
[3] Page 158, Tanjore Gazetteer by F. R. Hemingway | Article by G Srinivasan on Deccan Chronicle named “Royals, landlords behind RMH ophthalmology department” on Mar 14, 2019
[4] Government of India’s National Mission on Monuments and Antiquities # TN21003812 | TNHSS 110th Anniversary annual
[5] Note on the past and present Administration of Raja’s Chatrams, Tanjore and Madura Districts (Thanjavur: V.G. & Bross., 1908)

Leave a Comment

Your email address will not be published.

Copyright 2018. All rights reserved.